Site icon ITamilTv

22 தமிழக மீனவர்கள் கைது : அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Anbumani Ramadoss

Spread the love

22 Tamil Nadu fishermen arrested : இலங்கை கடற்படையினரால் மேலும் 22 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது: அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது..

“இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை அவர்களின் நாட்டுப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாட்டுப்படகு மீனவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்பது நன்கு தெரிந்தும், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கி நேற்று வரையிலான இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 61 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது (22 Tamil Nadu fishermen arrested).

இதையும் படிங்க : லண்டன் பயண ரகசியம்! விரட்டப்படுகிறாரா அண்ணாமலை? அமித்ஷா கொடுத்த அசைன்மென்ட்?

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 166 விசைபடகுகளை பறிமுதல் செய்திருக்கிறது. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடருவது கவலையளிக்கிறது.

மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version