பழநியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பழநி முல்லை நகரைச் சேர்ந்தவர்கள் இளங்குமரன் – ரேணுகா தேவி தம்பதி . இதில் இளங்கோவன் சொந்தமாக எலெக்ட்ரானிக் பொருட்கள் கடை நடத்தி வரும் நிலையில் அவரது மனைவி ரேணுகா தேவி அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் .
இவர்களுக்கு வினித் ,தேன்மொழி என இரு பிள்ளைகள் உள்ளனர் . வினித் கோவையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தேன்மொழி பிளஸ் 2 படித்து வந்துள்ளார் .
Also Read : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – என்கவுன்டர் அச்சத்தில் சரணடைந்த பிரபல ரவுடி..!!
இந்நிலையில், இவர்களது வீடு நேற்று நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . தகவல் அறிந்த்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இளங்குமரன் – ரேணுகா தேவி மகள் தேன்மொழி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.
இதில் தேன்மொழி மற்றும் ரேணுகா தேவி கழுத்து அறுபட்டும் இளங்குமரன் தூக்கில் தொங்கியபடியும் இருந்ததால் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .