சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவத்துக் வானவேடிக்கைகள் , அதிர வைக்கும் பாட்டாசுகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாநில அரசுகளும் பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தும் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடவும் அறிவிருத்திருத்தி இருந்தது.
Also Read : பள்ளி மாணவி மீது பாலியல் வன்கொடுமை – இன்ஸ்டா இளைஞர் கைது..!!
அந்தவகையில் தற்போது சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்து காரணமாக 544 பேர் காயம் அடைந்தும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பட்டாசு, ராக்கெட் வெடித்து மொத்தமாக 150 இடங்களில் தீ விபத்து; சென்னையில் 48 இடங்களில் தீ விபத்து; கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீ விபத்துகள் குறைந்துள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.