Site icon ITamilTv

TOEFL தேர்வில் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த 4.5 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..!!!

TOEFL

TOEFL

Spread the love

புதன்கிழமை நடைபெற்ற TOEFL (Test of English as a Foreign Language) தேர்வில் ஆந்திரப் பிரதேசத்தை (TOEFL) சேர்ந்த 4.5 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்த 13,104 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

வெற்றிகரமாக இந்த தேர்வு 13, 104 பள்ளிகளில் உள்ள 4,53,265 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மேற்பார்வையிட்ட பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரவீன் பிரகாஷ் கூறியாதாவது :

தொலைதூர பழங்குடிப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றதை கண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

Also Read : https://itamiltv.com/madurai-meenakshi-amman-temple-chitra-festival-starts-with-flag-hoisting/

மேலும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இத்தேர்வில் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த 5,907 பள்ளிகளில் இருந்து 16.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு கலந்து கொள்ள போகிறார்கள் எனவும் அவர் கூறினார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி சோதனைச் சேவை மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பிரகாஷ் குறிப்பிட்டார்.

ஆந்திரப் பிரதேச அரசு, உலகின் மிகப்பெரிய மதிப்பீடு, ஆராய்ச்சி மற்றும் கற்றல் அமைப்பான பிரின்ஸ்டனை தளமாகக் கொண்ட ஈடிஎஸ் (Princeton-based ETS) உடன் இணைந்து, மாநிலத்தின் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ஆங்கில மதிப்பீடுகளை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தை ஜூன் 23, 2023 அன்று அறிவித்தது.

Also Read : https://itamiltv.com/today-is-international-human-space-flight-day/

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின்,தொலைநோக்கு பார்வை கொண்ட வழிகாட்டுதலின் கீழ், இந்த ஒப்பந்தம் மாணவர்களின் மொழி திறன்களை வலுப்படுத்துவதையும், தேசிய கற்றல் அளவீட்டில் சிறந்து விளங்க தேவையான திறன்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்குவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ETS இன் உலகத் தரம் வாய்ந்த மதிப்பீட்டு வளங்களை ஆந்திரப் பிரதேசத்தின் (TOEFL) கல்விக் கட்டமைப்பில் ஒருங்கிணைத்தது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் அரசு பள்ளிகளில் சேரும் மில்லியன் கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள்.


Spread the love
Exit mobile version