ITamilTv

தோளில் சுமந்து தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. கேரளாவில் நெகிழ்ச்சி!

Spread the love

கேரளாவைச் (kerala) சேர்ந்த சகோதரர்கள், தங்களது தாயின் வாழ்நாள் ஆசையான “நீலக்குறிஞ்சி மலர்” (Neelakurinji) பூப்பதைக் காண்பிக்க, நடக்க முடியாத தங்களது தாயைத் தோளில் வைத்து சுமார் 1.5 கி.மீ சுமந்து தூக்கிச் சென்று,

Neelakurinji

அவரது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், (kerala) கோட்டயத்தைச் சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால் (Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி மலர் பூப்பதைப் பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.

இதனை அறிந்த அவரது மகன்களான ரோஜன் மற்றும் சுந்தரம், தாயின் ஆசையை நிறைவேற்ற ஒரு திட்டம் போட்டுள்ளனர்.

அதன்படி, தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதற்காக, தங்களது வீட்டிலிருந்து இடுக்கி மாவட்ட கள்ளிப்பாறை என்ற இடத்திற்கு, ஜீப் மூலம் தங்களுடைய தாய் எலிக்குட்டி பாலை அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் அவர்கள், அங்கிருந்து மலைக்கு மேலே சுமார் 1.5 கிமீ தூரத்திற்குத் தனது தாயாரைத் தோளில் சுமந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு மலர்ந்திருந்த, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் அரிய வகை மலரான நீலக்குறிஞ்சியை (Neelakurinji) கண்டு களித்தார் மூதாட்டி.

தற்போது, இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version