Tamilnadu

வெரி சிம்பிள்…! கழுதையை வைத்து தெருநாய் பிரச்சனைக்கு கமல் சொன்ன தீர்வு!

Kamal hassan stray dog

கடந்த ஒரு வாரமாக தெருநாய் விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. பிரபலங்கள் பலரும் இதை விவாதமாக்கி வருகின்றனர். குறிப்பாக, நீயா நானா நிகழ்ச்சியில் தெருநாய்கள் குறித்த விவாதம் நடந்தது.

அதில் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் இணையத்தில் விமர்சிக்கப்பட்டார்கள். துணை நடிகை அம்மு, படவா கோபி உள்ளிட்டோர் விவாதத்தில் பேசியவை அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

இதற்க்கு விளக்கம் அளித்து பதில் வீடியோவையம் அவர்கள் பதிவிட்டார்கள். அதில் நீயா நானா நிகழ்ச்சி TRP-காக அவர்கள் பேசியதை எடிட் செய்து வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதன்பின் தொடர்ச்சியாக தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோசியல் மீடியாவிலும், மக்கள் மத்தியிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. தெருநாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய் குறித்த விவாதங்களும் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் தெருநாய் பிரச்சனை குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

“தெருநாய்கள் பிரச்சனைக்கு தீர்வு மிகவும் எளிதானது. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் தெரிந்தவர்கள்.. கழுதை காணாமல் போனது குறித்து கவலைப்படுகிறார்களா? நமக்காக பொதி சுமந்த கழுதையை இப்போது பார்க்கிறதே இல்லையே. கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா..

எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்.. எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும்.. அவ்வளவுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு ரொம்ப எளிது, எல்லா உயிர்களையும் முடியுற வரை தான் காப்பாற்ற முடியும் என்ற வகையில் கமல் ஹாசன் பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *