தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சி தலைவரான சசிகலாவுடன் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படுமென பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
75 தலைப்புகள் கொண்ட, 101 பக்க தேர்தல் அறிக்கையை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டதில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி. பொதுச் செயலாளர் முரளி சங்கர். பொருளாளர் சையத் மன்சூர் உசேன் அமைப்பு செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ் ஒவ்வொரு தனிமனித வளர்ச்சி, ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வும், நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் என்கிற அடிப்படையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உயர்வு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக மக்களுக்காக தான் பாடுபடுவதாகவும் மக்களின் உரிமைக்காக பாமக எப்போதும் போராடும் என்றும் தன் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அதேபோல் தங்களுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரவு தர வேண்டும் என தமிழக மக்களை அன்போடு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
பாமக ராமதாஸ் தரப்பு கூட்டணிக்கு வேறு கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும், வாய்ப்பு இல்லாமலும் போகலாம் என் கூறிய அவர் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
கூட்டணி கட்சி தலைவி சசிகலாவுடன் கலந்து ஆலோசித்து யாருக்கு எவ்வளவு தொகுதியில் போட்டியிடுவது என அறிவிப்போம் என தெரிவித்தார்.
