India

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு!அரசியல் களம் சூடுபிடிப்பு!

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் (ஏப்.29) நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 23ஆம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த கட்டத்தில் 93.19 சதவீதம் என்ற அளவில் அதிக வாக்குப்பதிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

இப்போது மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (ஏப்.29) நடைபெற உள்ளது.

இதற்காக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் உள்ளது.

மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) செயல்பட்டு வருகிறது.

இந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இடது முன்னணி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி என நான்கு தரப்புகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் தேர்தல் களம் பலமுனை போட்டியாக மாறியுள்ளது.

என்றாலும், முக்கியமான போட்டி திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நிலவுகிறது.

இரு கட்சிகளும் மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், நாளை மறுதினம் நடைபெறவுள்ள வாக்குப்பதிவை அனைவரும் கவனத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *