Tamilnadu

மே 20: மெடிக்கல் ஷாப் மூடல்… பொதுமக்கள் முன்கூட்டியே மருந்து வாங்க அறிவுரை!

சட்டவிரோத ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மே 20-ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்கமும் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள சில்லரை மருந்துக் கடைகள் அன்றைய தினம் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மருந்துகள் சாதாரண பொருட்கள் அல்ல; அவை நோயாளிகளின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையவை என்பதால் ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது ஆபத்தானது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் அதிக தள்ளுபடி வழங்குவதால் சிறிய மருந்துக் கடைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோத ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *