Site icon ITamilTv

கட்டுபாட்டு அறைக்கு வந்த ”CALL”.. அலறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்!!

Spread the love

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில்(central railway station)நிலையத்திற்கு பல்வேறு இடங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தது வியாசர்யாடியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது


Spread the love
Exit mobile version