ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டு வராமல் இருக்கும் நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தென்மேற்கு வங்கக் கடலில் நாளை (டிச.07) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
Also Read : நெல்லை அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருட்டு..!!
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வரும் 12ம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இதன்காரணமாக 12,13ஆம் தேதிகளில் தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.