ITamilTv

கனமழையால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்..!!

Spread the love

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பள்ளி , கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அறிவித்துள்ளது. ஒவ்வரு மாவட்டத்திற்கும் தனி தனியே தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை
தெரிவிக்கலாம். 

ஒவ்வரு மாவட்டத்திற்கும் வரிசையாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்னைகளை புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். 044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை
தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version