Site icon ITamilTv

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் Mike Mohan

Mike Mohan

Mike Mohan

Spread the love

மறைத்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் மைக் மோகன் (Mike Mohan) நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் .

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.

சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோக கடலில் மூழ்கடித்தது .

இதையடுத்து கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய செலுத்தினர் .

விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க நடிகர் மைக் மோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அஞ்சலி செலுத்திய பின் அங்குள்ள 1000 ஆயிரம் பேருக்கு நடிகர் மைக் மோகன் அன்னதானமும் வழங்கினார்.

Also Read : https://itamiltv.com/full-time-politics-kamal-explanation/

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மைக் மோகன் கூறியதாவது :

கேப்டன் விஜயகாந்த் சார் ஒரு நல்ல மனிதர் அவரை போல் யாராலயும் இருக்க முடியாது . எல்லாருக்கும் கேப்டனா வாழ்ந்தவர் விஜயகாந்த் .

விஜயகாந்த்துக்கு நண்பனாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்; அவருடை முரட்டுத் தைரியமும், உண்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் பண்ணுகிறார்கள் என்றால், அவர் இருக்கும் போது அதுபோல வாழ்ந்து காட்டியவர்

இப்போதும் விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்குவது பெருமைப்படக்கூடியது; இதை பார்க்கும்போது அவர் மீதுள்ள மரியாதை இன்னும் அதிகமாகிறது

எத்தனை ஆறுதல் சொன்னாலும் அவரது குடும்பத்திற்கும் தமிழ் திரையுலகிற்கும் கேப்டனின் மறைவு பேரிழப்பு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம் என Mike Mohan தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version