தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கஸ்தூரியின் பேச்சு குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
இவ்வழக்கில் கஸ்தூரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த பின் பேசிய நீதிபதி கூறியதாவது :
தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கஸ்தூரி பேசிய பேச்சு எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டி உள்ளது.
கஸ்தூரியின் பேச்சு வெறுப்புப் பேச்சாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில் அது வெடிகுண்டு போல் உள்ளது.
கஸ்தூரியின் ட்வீட், மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை. இதுபோன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக்கொள்ளப்படாது
சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்கனவே வில்லிலிருந்து வெளியேறிய அம்பு போல அடைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.