Site icon ITamilTv

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த நடிகை? – வைரலாகும் டிவிட்டர் பதிவு!

Spread the love

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. அதைத் தொடந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

மேலும், வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. இதற்காக, நேற்று இருவரும் பாரம்பரிய நெல் விவசாயிகளை சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை வினோதினி இணைந்துள்ளார். அதை உறுதிப்படுத்தும் விதமாக வினோதினி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, அதோடு சேர்த்து சில வரிகளையும் எழுதியுள்ளார்.

அதில், கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?

அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?

அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?

அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?

அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?

அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டு கூட இல்லையே?

அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்…

கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.

அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி.

ஆரம்பிக்கலாங்களா?

மய்ய அரசியல..!


Spread the love
Exit mobile version