Site icon itamiltv.com

டெல்லியில் நடந்த இபிஎஸ் டீல்.. ஒகே சொன்ன அமித் ஜி- மாஸ் காட்டும் அதிமுக!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.

இந்நிலையில், அதிமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐ சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி விசிட்

இதற்குப் பிறகு அன்புமணி, தினகரன் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான விவரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பரவி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்தவொரு பிரச்சனை இல்லை என்றும், சில தொகுதிகளை ஒதுக்குவதில் சிறிய கட்சிகள் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, புதிய தமிழகம் கட்சி, பாமக, அமமுக உள்ளிட்ட சிறிய கட்சிகள் எத்தகைய சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

163 தொகுதியில் போட்டியிடும் அதிமுக

தற்போது, அதிமுக 163 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதன் காரணம், திமுக கூட்டணியில் 163 தொகுதிகளில் தமது வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிமுக தனிப்பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.மேலும், அதிமுக கூட்டணியில் இணைந்த சில சிறிய கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடுகள் வழங்கப்படலாம்.

அமித்ஷா கொடுத்த க்ரீன் சிக்னல்

இதில் புரட்சி பாரதம், இந்திய குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வேர்ட் பிளாக், பசும்பொன் தேசிய கழகம் போன்ற கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகுதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

பாஜக கூட்டணியில் இணைந்த 66 தொகுதிகளையும் சேர்த்தால், மொத்த 234 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி 163 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது.

Exit mobile version