Site icon ITamilTv

தருமபுரியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவு..!!

High heat

High heat

Spread the love

High heat : தருமபுரியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கொளுத்தும் சூரியனால், வெப்ப அலை அதிகரித்துள்ளது.

இதனால், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது .

நேற்று (01.05.24) 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 1983ம் ஆண்டு மே மாதம் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியதே உச்சபட்சமாக இருந்த நிலையில், நேற்றைய தினம் அது முறியடிக்கப்பட்டுள்ளது.

Also Read : கொளுத்தும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறந்திடுக – துரை வைகோ வேண்டுகோள்

இந்நிலையில், இன்று தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கடுமையான வெப்பம் இரு பதிவாகி உள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி,

கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 19 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு; அதிகபட்சமாக கரூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

தருமபுரியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது High heat

.


Spread the love
Exit mobile version