டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் டெல்லியில் தற்போது நிலவும் காற்று மாசுபாட்டின் அளவால், அங்கு வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது .
காற்றின் தரத்தை மேம்படுத்த அரசு எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவை சிறிதளவு மட்டுமே பயன் தருவதால் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
Also Read : நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது – நீதிபதி காட்டம்..!!
இந்நிலையில் டெல்லியில், காற்று மாசு கலந்த பனிமூட்டம் காரணமாக இன்று 300-க்கு மேற்பட்ட விமானங்கள், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .
இன்று காற்றின் தரக் குறியீடு (AQI) 432 ஆக உள்ள நிலையில், காற்றின் தரம் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது; எதிரே வரும் வாகனங்கள் மிக குறைந்த அளவிலே தென்படும் நிலை ஏற்பட்டுள்ளது