Site icon ITamilTv

yathra-2 டிரைலர் -ஆந்திர முதல்வராக ஜீவா

yathra-2

yathra-2 டிரைலர் -ஆந்திர முதல்வராக ஜீவா

Spread the love

மம்முட்டி மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்று படமான ‘’யாத்ரா 2’’ (yathra-2 ) படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸில் இருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அம் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார்.

அம்மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ள நிலையில் இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ளதால் அம்மாநிலத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா2 பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தை மஹி வி.ராகவ் எழுதி, இயக்கியுள்ளார். இதில், மம்முட்டி மற்றும் ஜீவா நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கேரக்டரில் ஜீவா நடித்துள்ளார்.

இப்படம் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அவரின் இளமை காலம் முதல் ஆந்திர முதலமைச்சர் ஆனது வரை இதில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாகமான “யாத்ரா” 2019 ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியானது.

ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இதையும் படிங்க : “உயிருடன் தான் இருக்கேன்” -வீடியோ வெளியிட்ட poonam pandey

மஹி வி.ராகவ் இயக்கிய இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார்.

தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியானது. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

https://x.com/ITamilTVNews/status/1753648031034179866?s=20

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் நடக்க உள்ள நிலையில் ‘’யாத்ரா 2’’ (yathra-2 ) படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.


Spread the love
Exit mobile version