பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32), ( poonam pandey) கருப்பை வாய் புற்று நோய் காரணமாக உயிரிழந்ததாக நேற்று செய்திகள் வெளியாகிய நிலையில், தான் உயிரோடு இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த நஷா’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகனானார் மாடல் பூனம் பாண்டே.
இதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் லவ் கி பேஷன், மாலினி அண்ட் கம்பெனி, ஆ கயா ஹீரோ, தி ஜர்னி ஆஃப் கர்மா போன்ற திரைப் படங்களில் நடித்துள்ளார்.
ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள இவர் பத்திரிக்கைகளுக்கு போட்டோ ஷூட்கள் மூலமாகவும் சம்பாதித்தார்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாண்டே, அவ்வப்போது அரை நிர்வான புகைப்படங்களை வெளியிடுவது, சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது என மக்களிடையே பிரபலமடைந்தார்.
இந்நிலையில், பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகத் வெள்ளிக்கிழமை காலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், நான் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் என்று நடிகை பூனம் பாண்டே ( poonam pandey) விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : jasmine : மல்லிகையில் தோன்றிய பேரறிஞர் அண்ணாவின் முகம் – வைரல் ஓவியம்
இந்த பதிவில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.
ஏராளமான பெண்கள் துரதிஷ்டவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய்.
https://www.instagram.com/reel/C24C_LyIy6m/?utm_source=ig_web_copy_link
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நோயால் யாரும் இனிமேல் சாக கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த கண்ணீருக்காகவும், நான் காயப்படுத்தியவர்களுக்காவும் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
எனது நோக்கம் நாம் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தைப் பற்றி அதிர்ச்சிகொடுத்து பேசவைப்பதே – அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்,” என்று அவர் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்
பூனம் பாண்டேவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.