Sasikala Meet-அண்ணாவின் நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சசிகலா சென்று மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது .அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கும்,
நினைவு இடத்திற்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில்,திமுக சார்பி அக்கட்சியின் பொதுச் செயலாளர் -அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலும் – பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் முன்னிலையிலும்
நடைபெறும் இம்மாபெரும் அமைதிப் பேரணியில், கழக நிர்வாகிகள், முன்னணியினர், அடலேறுகள் ஆயிரக் கணக்கில் பங்கேற்கிறனர்.
காலை 8.00 மணி அளவில் திருவல்லிக் கேணி – வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை’ அருகில் தொடங்கி, அண்ணா நினைவிடம் நோக்கி நடைபெற்றது.
இதையும் படிங்க:DMK Manifesto 2024-உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்! வெளியான அறிவிப்பு..
கழகத்தின் இம்மாபெரும் அமைதிப் பேரணிக்கு கழகப் பொதுச் செயலாளர் – அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமை வகித்தார்.கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார்.
இதனை தொடர்ந்து சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற திமுக பேரணி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன்,
உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன்பின், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1753674200269898075?s=20
இதுபோன்று அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதில் குறிப்பாக, அண்ணாவின் நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சசிகலா சென்று மரியாதை செலுத்தினார்.
அந்த சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அப்போது, இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா(Sasikala Meet) ஓ.பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு,
நான் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வேறுரோறுவாராக பார்க்கவில்லை. அனைவரையும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான். நான் அதிமுக கட்சி ஆரம்பத்தில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.