Site icon ITamilTv

கோவை வாக்கு சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற அண்ணாமலை – பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி!

Annamalai got only one vote

Spread the love

Annamalai got only one vote : நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிவடைந்து உள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணியானது இன்று காலி 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக,பாஜக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோயம்பத்தூர் தொகுதி தேர்தல் முடிவை நாடே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தது.

இன்று காலை கோவை மக்களவை தொகுதிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திமுக,பாஜக, அதிமுக ஆகிய வேட்பாளர்கள் மாறி மாறி வாக்குகளை பெற்று வந்தனர்.

இதையும் படிங்க : வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை!

இதில் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் 312 வாக்குகள் பதிவாகி இருந்தது.

அந்த 312 வாக்குகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 165 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கே இராமச்சந்திரன் 24 வாக்குகளும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரே ஒரு வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் (Annamalai got only one vote).

மற்ற வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே அண்ணாமலை பெற்றிருந்தி நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் வெறும் ஒரே ஒரு வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

இதனிடையே தற்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் 15ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.


Spread the love
Exit mobile version