Site icon ITamilTv

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

special trains

special trains

Spread the love

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை – கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல காலம் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாளை மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை – கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

அதன்விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.19-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் இரவு 11.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06111) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவ.20-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06112) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

Also Read : என்.எல்.சி.யில் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி துவக்கம்..!!

இருமார்க்கமாகவும் தலா 9 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்பட பல்வேறு நிலையங்களில் நின்று செல்லும்.

இதுதவிர, சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்களும், ஒரு ஏசி கரீப்ராத் வாராந்திர சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளன. இந்த 3 சிறப்பு ரயில்களும் இருமார்க்கமாக, தலா 9 சேவைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ரயில்வே தரப்பில் இருந்து விரைவில் வெளியாக உள்ளது.


Spread the love
Exit mobile version