ITamilTv

நெல்லையில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

half year exam dates in nellai

Spread the love

நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தமிழக அரசு மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொண்டது. தன்னார்வலர்களும் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.

வடமாவட்டங்களில் பெய்த கனமழையை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்ததது.

கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. வீடுகள் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பொது மக்கள் செய்வதறியாது நிலைகுலைந்து போயினர்.

இதனை அடுத்து அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அந்த வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்கள் இரவு பகலாக களத்தில் இறங்கி வெள்ள மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு, நிவாரணம் வழங்கும் பணிகளையும் சிறப்பாகச் செய்தனர்.

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.   எங்கு பார்த்தாலும் கடல் போல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், ஏரி, குளங்கள் உடைப்பால் பல கிராமங்களிலும், பள்ளிகளிலும் வெள்ளம் புகுந்தது.  இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது

இதனால் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது தென்மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டன.

வட மாவட்டங்களில் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தேர்வுகளை நடத்த முடியவில்லை. மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறையும் வந்ததால் மற்ற பள்ளிகளை போலவே தென்மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அரையாண்டு தேர்வானது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

half year exam dates in nellai
half year exam dates in nellai

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

அதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version