Site icon ITamilTv

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு..!!

chance to apply for engineering course

chance to apply for engineering course

Spread the love

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு ( chance to apply for engineering course ) பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை நீடித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அன்றே அறிவிக்கப்பட்டது .

தமிழ்நாடு முழுவதும் சுமார் 7.72 லட்சம் மாணவ மாணவிகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் . தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதியோடு வெற்றிகரமாக முடிந்தது .

இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த மே 6 ஆம் தேதி வெளியிட்டது.

தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read : கோவையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த 4 பேர் கைது..!!

இந்நிலையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது .

ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ₹500; எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினருக்கு ₹250 பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் ( engineering admission ) உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது

இதையடுத்து சம வாய்ப்பு எண் அதாவது ரேண்டம் எண் ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணியானது ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தரவரிசை பட்டியல் ஜூலை மாதம் 10 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவ மாணவிகள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து. பதிவு கட்டணம் செலுத்தி, தங்களது சான்றிதழ்களை ( chance to apply for engineering course ) பதிவேற்றம் . செய்து கொள்ளலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version