Site icon ITamilTv

அதிக நேரம் உட்கார்ந்துட்டே இருப்பவரா நீங்கள்? இது உங்கள் ஹெல்த்தில் என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

Spread the love

ஸ்கூல்ல இருந்து வந்த உடனே என்ன டிவி… போய் ஓடி ஆடி விளையாடு…
சும்மா உட்கார்ந்த இடத்துலயே இருக்காத…. கொஞ்சம் எழுந்து உடம்புக்கு அசைவு கொடு…
நம்ம வீட்டு பெரியவங்க சொல்லி கேட்டுருப்போம்… (health tips)  அதை கேட்டும் கேட்காத மாதிரி போயிருப்போம், சில நேரங்களில் திட்டியும் இருப்போம். ஆனால் அதிக நேரம் உட்கார்ந்துட்டே இருப்பது என்ன மாதிரியான உடல் விளைவுகளை ஏற்படுத்துகிறதுனு தெரியுமா?

இங்க பலருக்கும் உட்கார்ந்து இருக்குறதுனாலா என்ன பிரச்சனை வந்துட போகுதுனு தோணும். ஆய்வின் படி, இந்த உலகத்துல 25% பேர் தங்களோட வாழ்க்கையை உட்கார்ந்தே கழிக்கின்றனர், இதனால் உடலுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

அதிக நேரம் (8 மணி நேரம்) தொடர்ந்து இருக்கும் போது நம்ம உடலோட உடல் இயங்கும் அளவு குறைவாக இருக்கும்.

Also Read :தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு செய்வதற்கான வாக்குச்சாவடிகள் தயார் – சத்யபிரதா சாகு

மேலும் முதுகு வலி, தூக்கமின்மை, மனநல பிரச்சனை போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது நம்மில் சோம்பேறி தனத்தை உண்டாக்கும். சுறுசுறுப்பாக இருப்பது நீங்கள் நினைப்பது போல் கடினம் அல்ல.

சில தினசரி வழக்க மாற்றங்களை செய்தாலே இவற்றிலிருந்து இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக தொடர்ந்து ஒரே இடத்தில அமராமல் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நடப்பது, சின்ன சின்ன வேலைககளுக்கு அடுத்தவரை எதிர்பார்க்காமல் நாமே எழுந்து போய் செய்வது, படிகளில் ஏறி செல்வது என செய்ய வேண்டும்.

குழந்தைகள் குறிப்பாக மொபைல், டிவி, கேம் போன்றவத்திற்கு (health tips)  அடிமையாகாமல் வெளியில் சென்று விளையாடுவது அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

 


Spread the love
Exit mobile version