ITamilTv

ஆசிய பாரா விளையாட்டு போட்டி – இந்தியா சாதனை!

Spread the love

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியா இது வரை 100 பதக்கங்களுக்கும் மேல் வென்றுள்ளது.

சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன் நடக்கிறது. இதில் இந்திய வீர வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி, பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த போட்டிகளில் இந்தியா இது வரை 100 பதக்கங்களை வென்றுள்ளது அதன் இந்தியா இதுவரை 26 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது.

இதுவரை ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா இத்தனை பதக்கங்களை வென்றதே இல்லை. குறிப்பாக கடந்த முறை 15 தங்கப் பதக்கம் மட்டுமே வென்ற இந்தியா, தற்போது 27 தங்கம் வரை வென்றுள்ளது.


Spread the love
Exit mobile version