Site icon ITamilTv

BARC Recruitment : பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,374 பணியிடங்கள்.. முழு விவரம் இதோ!

Spread the love

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

(BARC) மொத்த பணியிடங்கள் – 4,374

காலியாக உள்ள பணியிடங்கள் :

Scientific Assistant/B (விஞ்ஞான உதவியாளர்)

Technician/B (டெக்னீச்சியன்)

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க B.E., B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும், எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல், மெட்டீரியல், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் வயது, நேரடி தேர்வு முறைக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலை தேர்வு

அட்வான்ஸ் தேர்வு

திறனறிவு தேர்வு

முதல்நிலை தேர்வில் கணிதம், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பாடங்களில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும்.

அதில், தேர்ச்சி பெறுபவர்கள் ‘Advanced Test’-ல் பங்கேற்க அழைக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள், https://barconlineexam.com/- என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் :

டெக்னிக்கல் அதிகாரி – ரூ.500

விஞ்ஞான உதவியாளர் – ரூ.150

தேர்வு மையங்கள் :

கோயம்புத்தூர், கொல்கத்தா, புனே, உதய்பூர்,விஜயவாடா, விசாகப்பட்டினம், பாட்னா, சென்னை, மதுரை, எர்ணாகுளம். விண்ணப்பத்தாரர்கள் தேர்வு மையத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2023


Spread the love
Exit mobile version