Site icon ITamilTv

BIRIYANI MAN Issue : வீதிக்கு வந்த யூடியூபர்கள் மோதல்! பின்னணியில் நடந்தது என்ன?

BIRIYANI MAN Issue

Spread the love

இப்போ எல்லோர் கைகள்ளையும் இருக்க சோசியல் மீடியா மூலமா பலர் பிரபலம் ஆகுறாங்க. அதுல நிலைய பேர் தங்களுடைய திறமைகளை மூலமா பிரபலம் ஆக, சிலரோ அந்த பிரபலங்கள் மேல குற்றச்சாட்டுகள முன்வச்சு, வம்பிழுத்து பிரபலம் ஆகுறாங்க.. கூடவே பிரச்சனைகளையும் உண்டு பண்ணிடறாங்க… அந்த வகைல இப்போ, லைவ்ல தற்கொலைக்கு முயற்சி பண்ணுற மாதிரி ஒரு வீடியோவ போட்டு ஒரு பிரச்சனைய உருவாக்கி இருக்கவாறு தான் யுடியூபர் பிரியாணி மேன். என்ன தான் நடந்தது? முழு கதை என்னன்னு பார்க்கலாம்…

இப்போ பிரச்சனைய இழுத்து விட்டிருக்க பிரியாணி மேனின் வீடியோக்களும் அதுல அவர் பேசுவதும் எப்படி இருந்திருக்கு அப்டீன்னு முதல்ல பார்க்க வேண்டியிருக்கு. அதாவது, பிரியாணி மேன் என்பவற்றின் உண்மையான பெயர் ரபி. இவருடைய வார்த்தைகள் ரொம்பவே abusive ஆ இருக்கும், வாயை திறந்தாலே வன்மம்.. கோபம்.. அசிங்கம் தான் வெளிப்படும் அப்படீங்கிறது தான் இங்கு அவரை பத்தின ஒரு பார்வையா இருக்கு. அதுக்கு எடுத்துக்காட்ட இவரோட சில வீடியோக்கள்ல, பெண்களை விடாமல் திட்டுவது, பெண்கள் வீட்டு வேலை பார்க்க வேண்டும், திருமணம் செய்வதே வேலை பார்க்கத்தான், செம்மொழி பூங்கா என்பது பாலியல் தொழில் செய்யும் இடம்னுலாம் பேசியிருக்குறது அசிங்கம், வன்மத்தின் உச்சம் தான்.

இப்படிப்பட்ட பிரியாணி மேன்தான் சமீபத்தில் யூடியூபர் இர்பான் பத்தியும், தொழில்முனைவோரா இன்ஸ்ட்டாகிராமில் டெய்லரிங் கற்று கொடுக்கிற தயாளு டிசைன்ஸ் என்ற நிறுவனத்தை வச்சிருக்க டெய்லர் அக்கா அப்டீங்கிறவங்க மேலையும் கடுமையான புகார்களை வைத்தார். இர்பான, டெய்லர் அக்கா அளவிற்கு பிரியாணி மேன் பிரபலம் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிரியாணி மேன் கடந்த சில நாட்களில் இரண்டு பேரையும் தாக்கி வீடியோ போட்டு இருந்தார்.

நடந்த பிரச்சனைகள step by step ஆ பார்த்தோம்னா,

  1. முதல்ல பிரியாணி மேன்.. இர்பானை பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் இர்பான் மச்சான் ஏற்படுத்திய கார் விபத்து பற்றி விமர்சனங்களை வைத்தார். அது இர்பான் செய்தது என்றும், விபத்து ஏற்படுத்திவிட்டு இர்பான் நிற்கவில்லை என்றெல்லாம் கூறினார். அதோடு இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தை பற்றியும் விமர்சனங்களை வைத்தார்.
  2. இதற்கெல்லாம் இர்பான் ஆதாரங்களுடன் பதிலும் கொடுத்தார். மச்சான் ஓட்டியதற்கான ஆதாரம், விபத்து ஏற்படுத்திய பின் அங்கேயே நின்றதற்கான ஆதாரம், போலீசிடம் பேசியது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி எல்லாம் இர்பான் பதிலடியை கொடுத்தார். அதோடு புகார்களுக்கு எல்லாம் ஆதாரங்களுடன் இர்பான் பதிலடி கொடுத்தார்.
  3. அதுக்கு அடுத்தபடியா, டெய்லர் அக்கா ‘ப்ளவுஸ் வீடியோ’ என்று ஆபாசமாக வீடியோ போடுவதாக புகார் வைத்தார் பிரியாணி மேன் அதோடு நிற்காமல்.. டெய்லர் அக்காவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பெண் என்பதற்காகவே கடுமையாக பேசிருந்தாருன்றது அழுத்தமான குற்றச்சாட்டு. அதோடு இல்லாமல்.. அவரோட class ல join பண்ணுனவன் அப்படீங்குற முறைல இந்த வீடியோவ போடுறேன்ற பேர்ல அவர் மோசடி செய்றதாக புகார்களை வைத்தார்.
  4. ஆனால் இதற்கு டெய்லர் அக்கா பதில் தரவில்லை. நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கிட்டு கிட என்று விட்டுவிட்டார்.
  5. அதுக்கு மாறாக ஏ2டி என்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து விளக்கும் சேனல்ல நந்தான்றவரு பிரியாணி மேன் டெய்லர் அக்கா மீது வைத்த புகார்கள் எல்லாம் பொய் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிச்சு வீடியோ போட்டாரு.
  6. இப்படிப்பட்ட சூழல்ல தான் கடுப்பான பிரியாணி மேன் நேத்து நைட்டு ஒரு லைவ் வீடியோ போட்டு ஏ2டி சேனலை தாக்கி பேசினதோட மட்டுமில்லாம, தற்கொலையும் செஞ்சுக்க போறது போல செயல்கள்ல ஈடுபட்டிருக்காரு… தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர்தான் என்று சொல்லி தூக்கிட முயன்றார். அதுக்கு பிறகு பேசி வைத்து போலவோ.. அல்லது வீடியோ பார்த்த அவரை சார்ந்தவங்க அனேக அம்மாவுக்கு போன் பண்ணதாளையோ என்னவோ, அவரின் அம்மா கதவை தட்டி திட்ட.. தற்கொலை முயற்சி கைவிடப்பட்டது.

இந்த வீடியோவை அடுத்து, ஒருபுறம் ஒரு sympathy யான பார்வை உருவாகி பிரியாணி மேனுக்கு பலர் ஆறுதல் சொல்ல, மறுபுறம் ‘இந்த முயற்சியே ஒரு நாடகம்’ தான் அப்டீன்னு புகார்கள் வைக்கப்படுது. இதுல ரொம்ப sensitive ஆன விஷயம் என்னன்னா, தனக்குன்னு பல சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள்னு followers-அ வச்சிருக்க பிரியாணி மேன் ஒரு சமூக வலைதள லைவ்ல தற்கொலை முயற்சில ஈடுபட்டு தவறான வழில அவங்கள வழிநடத்த முயற்சி பண்ணதுக்காகவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்னு பலர் கோபத்தோடு போலீசாருக்கு புகார்களையும் கோரிக்கைகளையும் முன்வச்சிருக்காங்க.

இந்த வீடியோ பாக்குற பலர் நினைக்கலாம், ‘இது இப்போ நாட்டுக்கு தேவையா?’ அப்டீன்னு… இது யுடியூபர்களுக்கு இடையிலான வார்த்தை மோதலா இருந்தா நீங்க சொல்றது ஓகேன்னு எடுத்துட்டு போகலாம்… ஆனால், இங்க ஒருத்தர வளையொலி ஊடகத்துல நேரடியா தற்கொலைக்கு முயற்சி பண்ணதாலயும், அத பல இளையோர்கள் பார்த்து தவறான வழியில Influence பண்ணப்பட வாய்ப்பு இருக்கின்ற புள்ளிளையும் தான் இந்த விவகாரத்தை பேச வேண்டியிருக்கு.

இந்த ஒரு வீடியோ மூலமா, தற்கொலை எதற்கும் தீர்வல்ல… மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணமோ வந்தால் அதிலிருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் – 104 அல்லது பிற தற்கொலை தடுப்பு உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்னு விழிப்புணர்வு மெசேஜ்களும் சொல்லப்பட்டுக்கிட்டு வருது.. அதுபோக, யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள content களுக்கு ஒரு கடிவாளம் வேண்டும்ன்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்க தொடங்கியிருக்கு… கருத்து சுதந்திரத்தை பறிக்காத வகையில் நல்லதொரு மாற்ற வரட்டும்…


Spread the love
Exit mobile version