Site icon ITamilTv

“பாஜக அனைத்து மதத்தையும் மதிக்கிறது”.. இந்திய தயாரிப்புகளுக்கு தடை! – அரபு நாடுகளின் கடும் எதிர்ப்பால் பணிந்த பாஜக!

Spread the love

இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கின்ற இறைத்தூதர் முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குறிய வகையில் பேசியது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அரசு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், ஈரான், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. குவைத், ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்திய தூதரகங்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்லி சம்மன் அனுப்பியுள்ளன.

முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதை கண்டித்து சம்மன் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அரபு நாடுகளில் உள்ள கடைகளில் இந்திய தயாரிப்பு பொருட்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் இந்திய தயாரிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது தொடர்பாக பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்;

“ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மதங்கள் தோன்றி, செழிப்பாக வளர்ந்துள்ளன. பாஜக அனைத்து மதத்தையும் மதிக்கிறது. எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது. அத்தகைய நோக்குடன் செயல்படும் நபர்களையும் ஊக்குவிக்காது. இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நாட்டை அனைவரும் சமமாக வாழும், அனைவரும் சமமான மாண்பைப் பெறும் வளமிக்க நாடாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு முக்கியம். அப்போது தான் அனைவருமே வளத்தின், வளர்ச்சியின் கனியை சுவைக்க முடியும்” என்று விளக்கியுள்ளது.


Spread the love
Exit mobile version