ITamilTv

”சங்கி கூட்டம்..நாங்க சங்கி கூட்டம்”!! VIBE -ஆன பாஜகவினர்..

Spread the love

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் ”என் மக்கள் என் பயணம்” நடைப்பயணத்தின் போது பாடகர் ஒருவர் பாடிய நாங்க சங்கி கூட்டம் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த பாஜகவின் 9 ஆண்டு சாதனையை எடுத்துரைக்கும் வகையில் ,தமிழ்நாடு முழுவதும் ”என் மக்கள் என் பயணம்” என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். பாதயாத்திரை தொடங்கிய 110 ஆவது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார்.

இந்த நடைப்பயணத்தை மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுர மாவட்டத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் ‘என் மக்கள் என் பயணம்” நடைப்பயணம் மேற்கொண்டார்.

https://x.com/kovaikarthee/status/1705964539454558255?s=20

அப்போது சுந்திராபுரம் தொகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து இருந்த கூட்டத்தில், உடுமலை பிரவின் என்ற இளைஞர் இசையமைத்து பாடிய நாங்க சங்கி கூட்டம் என்ற பாடலை பாடி பாஜகவினரை உற்சாக படுத்தினார்.
தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version