Site icon ITamilTv

PMAY-G project fund | ”தமிழக அரசு சொல்வது பச்சை பொய்..” லிஸ்ட் போட்ட அண்ணாமலை..!

PMAY-G project fund

PMAY-G project fund

Spread the love

PMAY-G project fund | மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் நிதி பகிர்மானம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதில் தவறு இருப்பதாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு

சொல்லியிருந்ததாகவும் அதனை வெயிட்ட ஊடக நிறுவனம் பின்னர் அந்த பதிவை நீக்கப்பட்டுவிட்டதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு தரும் நிதி குறித்த விவரங்களை வெளியிட்ட நிலையில், அது உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு

குழு சொன்ன செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுவிட்டு, பின்னர் அந்த பதிவை நீக்கியதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக சில உண்மைகளை தெரிவிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று குறிப்பிட்டு PMAY-U குறித்த விவரங்களை அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: CM Stalin Speech | பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? -மனம் திறந்த முதல்வர்!

அதில்,PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ₹7 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும்.

இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ₹6921 கோடி.

ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால், எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

மத்திய அரசின் பங்கு: ₹39 கோடி, மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ₹2290.47 கோடி.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1760944985082655038?s=20

தமிழக அரசின் பங்கு ₹286.08 கோடி எனத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022-23 நிதியாண்டில், ரூ.555.89 கோடி செலவழித்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. இது உண்மையாகச் செலவிட்ட நிதியை விட ₹81 கோடி அதிகமாகும்.

இதைக் குறித்து தணிக்கை அதிகாரிகள் கேட்கும்போது, தமிழக அரசு பதில் கூறிக்கொள்ளட்டும் என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

சுருக்கமாகக் கூறினால், PMAY-G திட்டத்தின்(PMAY-G project fund) கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசு சொல்வது முழுக்க முழுக்க பொய்யானது என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version