Site icon ITamilTv

டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரஷ்யாவிற்குத் தொடர்பா?

Bomb threat to 100 schools

Spread the love

Bomb threat to 100 schools : விமான நிலையங்கள், மருத்துவமனைகளைத் தொடர்ந்து நேற்று முதல் தலை நகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் ஒரே மாதிரியாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும் இவை ஒரே ஐடியில் இருந்து பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலம் (என்.சி.ஆர்) பகுதி முழுவதும் உள்ள 100 பள்ளிகளுக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்… பறிபோன பிஞ்சு உயிர்.. நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

இதனையடுத்து, அடுத்தகட்டமாகப் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகளைப் பள்ளிகளிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

முதல் கட்ட விசாரணையில் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் பொய்யானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மத்திய ஏஜென்சி தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பெற்றோர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று டெல்லி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியைச் சோதித்ததில் ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Bomb threat to 100 schools.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரே ஐபி முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கில்லி’ பட போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர்கள்!


Spread the love
Exit mobile version