Site icon ITamilTv

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் தற்கொலை முயற்சி: மயிலாடுதுறையில் பரபரப்பு!!

Spread the love

18 வயது சிறுவனை காவல்துறை தாக்கியதாகப் புகார்  அளிக்கபட்ட நிலையில்,மனம் உடைந்த சிறுவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட,18 வயது சிறுவனை காவல்துறை தாக்கியதாகப் புகார்  அளிக்கபட்ட நிலையில் ,மனம் உடைந்த சிறுவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த   உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் சாந்துகாப்புதெருவை  சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த தெட்சணாமூர்த்தி என்பவருக்குமிடையே கோயில் நிகழ்ச்சிக்கு பணங்கொடுப்பது தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது அசோக்குமாருக்கு ஆதரவாகக் குருமூர்த்தி மற்றும் குருமூர்த்தியின் உறவுக்கார சிறுவன் சந்தோஷ(18)  சண்டையை விலக்கி விட முற்பட்டபோது இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தெட்சணாமூர்த்தி தரப்பினர்  புகார் தெரிவித்ததை அடுத்து குருமூர்த்தி, சிறுவன் சந்தோஷ் மற்றும் அசோக்குமார் ஆகிய மூன்று பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்குப் பின்னர் காவல் துறையினர் மூவரையும் இன்று பிற்பகல் எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் சந்தோஷை காவல்துறையினர் தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அடுத்து மனம் உடைந்த சிறுவன் சந்தோஷ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில்,காவல்துறை தாக்கியதே இதற்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ள நிலையில், இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Spread the love
Exit mobile version