ITamilTv

”சத்தமே இல்லாமல் வந்த உதயநிதி..”ஷாக்கான மாணவர்கள்!!

Spread the love

திருச்சியில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் (udayanidhi stalin)திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். கடந்த 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “1முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும். 1545அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டிருந்தது.

மேலும், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையத் முதர்தசா மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த காலை உணவுத் திட்ட தயாரிக்கும் கூட்டத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் சரியாக இருக்கிறதா, மாணவர்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதிகாரியுடன் கேட்டு அறிந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தொடர்ந்து மாணவ, மாணவியர்களிடம் உரையடினார்.

இந்த நிகழ்வின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Spread the love
Exit mobile version