தன்னை விட்டு வேறு ஒருவருடன் சென்று மனைவி வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் காதலனை வழிமறித்து முன்னாள் கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை (Trauma background) ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவைச் சேர்ந்த 22 வயதாகும் சுதாசந்தர் என்ற நபர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் ஒரு பெண்ணுடன் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கொலையான வாலிபருடன் வந்த பெண்ணை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் (Trauma background) கிடைத்துள்ளது. அதில், அந்தப் பெண் 19 வயதாகும் ராகவி என்பதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையை அடுத்த ஆவடி மோரை பகுதியில் வசித்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுதாசந்தர் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், இவர்களது காதல் ராகவியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், ராகவியின் பெற்றோர் உடனடியாக அவருக்கு உறவுக்கார வசந்த் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதனையடுத்து, தற்போது இவர்களுக்கு இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்ற ராகவி முன்னாள் காதலருடன் வாழ முடிவு செய்திருக்கிறார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு கைக்குழந்தையுடன் வெளியேறிய அவர் காதலனுடன் லட்சுமிபுரத்தில் வீடு ஒன்றினை வாடகை எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ராகவியின் கணவர் உறவினர்கள் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்து நேற்று முன்தினம் சுதாசந்தரை வழிமறித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சுதாசந்தரை கொலை செய்த குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.