Site icon ITamilTv

பழைய சோறு நம்ம உடலில் இத்தனை மேஜிக் பண்ணுமா?

health tip

health tip

Spread the love

நவீன கலாச்சாரத்தால் நமது சமூகம் இழந்த ஒரு அமிழ்தம் பழைய சோறு…இன்று நம்மில் பலரும் பழைய சோறு (health tip) என்றாலே பசிக்கவில்லை, நான் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று ஓடி விடுவோம். அதிலும் பெரும்பாலானோர் பழைய சாதம் ஏழைகளின் என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்.

இப்போது நாம் கூறும் இந்த ஏழைகளின் உணவு தான் நம்முடைய முன்னோர்கள் காலத்தில் வசதியானவர்கள் முதல் வயல்களில் வேலை பார்ப்பவர்கள் வரை அனைவரின் தினசரி காலை உணவாக இருந்தது.

பழைய சாதம் மற்றும் அதை ஊறவைத்த நீராகாரமும் தான் நம் முன்னோர்களின் வலிமைக்கு காரணம்.

சமீபத்தில் அமெரிக்கா ஆய்வு ஒன்றில், உலகிலேயே மிக ஆரோக்கியமான காலை உணவு பழைய சோறு என்று கூறியுள்ளது.

காலம்காலமாக இந்தியர்களால் உண்ணப்பட்டு காலமாற்றத்தால் அவர்களே மறந்து போன இந்த பழைய சோறு தற்போது 5 பெரிய ஸ்டார் ஹோட்டல்களில், மண் பாத்திரங்களில் விற்பனையாகிறது.

Also Read : 40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள் – திருமங்கலத்தில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்..!!

அப்படி அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது…. என்ன எண்ணலாம் இருக்கிறது பார்க்கலாம் வாங்க…

பழைய சாதத்தில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

குறிப்பாக , மற்ற உணவுப் பொருள்களில் எளிதில் கிடைக்கப் பெறாத அரிதான பி6 மற்றும் பி12 வைட்டமின்களும் உள்ளன. மேலும், இவை செரிமான மற்றும் நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

பழைய சாதம் எடுத்துக் கொள்வது அதிகப்படியான உடல் சோர்வை நீக்க உதவுகிறது, குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, அஜீரணக் கோளாறு, தீராத ஏப்பம், மலக்குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

குறிப்பாகக் காலையில் வெறும் வயிற்றில் பழைய சத்தம் சாப்பிடுவது குடிப்பது குடல் புண், மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப் பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

பழைய சாதத்தில் இதனை நன்மைகள் இருந்தாலும் அல்ர்ஜி , சைனஸ் போன்ற ( health tip ) பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பழைய சாதத்தினை எடுத்துக் கொள்வது நல்லது.


Spread the love
Exit mobile version