Site icon ITamilTv

Cartoon Game : 5 வயது சிறுமிக்கு மாரடைப்பு? உயிரைப் பறித்த மொபைல் போன்!!

Cartoon Game

Cartoon Game

Spread the love

Cartoon Game : உத்தர பிரதேசத்தில், உயிரிழந்த சிறுமி மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் காமினி என்ற 5 வயது சிறுமி தனது தாயின் அருகே படுத்திருந்தவாறே மொபைல் போனில் கார்ட்டூன் கேம் (Cartoon Game) விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென விளையாட்டை நிறுத்தி அந்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய்.. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : “கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிப்பீர்” – அன்புமணி!!

ஆனால், குழந்தை திடீரென விளையாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழக்க காரணம் என்ன என்று தெரியாமல் சிக்குமியின் பெற்றோர் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், மாரடைப்பால் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என ஹசன்பூர் சமூக நல மைய பொறுப்பாளர் துருவேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அம்ரோஹா தலைமை மருத்துவ அதிகாரி சத்யபால் சிங் கூறுகையில்..,

சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம். ஆனால், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

சிறுமி மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமர் விக்ரஹம் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது..

அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு மாதங்களில் அம்ரோஹா மற்றும் பிஜ்னோர் மாவட்டங்களில் மட்டும் “மாரடைப்பு” காரணமாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மூத்த மருத்துவர் ராகுல் பிஷ்னோய் கூறுகையில், குளிர் காலநிலை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது பொதுவானதாக இருக்கலாம். ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரத்த அழுத்தம் பொதுவாக குறைந்து, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version