Site icon ITamilTv

”காவிரி விவகாரம்..”காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுக்கும் பிரச்சினையா? திருநாவுக்கரசர்!!

Spread the love

காவிரி நதிநீர் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுக்கும் பிரச்சினை அல்ல என்று திருச்சியில் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா பெரியார் கல்லூரியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அறிவுறுத்தலில் பேரில் திருச்சி நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட படித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கும் நபர்களுக்காக படிப்பிற்கு ஏற்ற அடிப்படை வேலைக்கான இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

இம் முகாமை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் துவக்கி வைத்தார். இதில் சுமார் 800க்கு கலந்து கொண்டனர்.வேலை வாய்ப்பு முகாமில் அமேசான், ராயல் என்ஃபீல்டு உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்,

இந்தியா முழுவதும் 20 கோடிக்கு மேற்பட்டோர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று மோடி தெரிவித்தார் அப்படி பார்த்தால் இந்த ஒன்பது வருடத்தில் 15 கோடி பேர்களுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பது தெரியாது.

தமிழகத்திலேயே வேலை வாய்ப்புக்காக ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை தொகுதியிலும் அடுத்த மாதம் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.

காவிரி நதிநீர் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுக்கும் பிரச்சினை அல்ல ஏறக்குறைய 50ஆண்டுகளாக தொடர்ச்சியாக இருக்கக்கூடிய பிரச்சனை சட்டரீதியாக மாநில அரசாங்கம் இரு முதலமைச்சர்கள், சம்பந்தப்பட்ட துறையினர், மத்திய அமைச்சர், காவிரி நதிநீர் வாரியம், நீதிமன்றம் உள்ளது.

அங்கு மாதாமாதம் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என நிர்ணயத்துள்ளது. அது திறந்து விடப்பட வேண்டும் இல்லை என்றால் மாநில அரசு உரிய முறையில் பிரதமர் மூலமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ பல்வேறு கட்டங்கள் பிரச்சனைகளை அணுக வேண்டும் என தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version