தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு (moderate rain) வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும், நாளையும் (12.06.2023 – 13.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை (moderate rain) பெய்யக்கூடும்.
புதன் கிழமை முதல் வெள்ளிக்கிழமை (14.06.2023 – 16.06.2023) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும்,
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.