ITamilTv

அடுத்த 5 நாட்கள்.. மறந்துராம குடை எடுத்துட்டு போங்க பிரண்ட்ஸ்.. மழைக்கு வாய்ப்பு இருக்காம் ..!

Spread the love

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு (moderate rain) வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்றும், நாளையும் (06.06.2023 – 07.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை (moderate rain) பெய்யக்கூடும்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் (08.06.2023 – 10.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாககக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version