ITamilTv

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Chance of rain in 10 districts

Spread the love

Chance of rain in 10 districts : தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..

“தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதையும் படிங்க : பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்ந்த பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது – முத்தரசன்!

எனவே இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த 3 மணி நேரத்தில் கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சாவூரில், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Chance of rain in 10 districts

வெப்பநிலையை பொறுத்தவரை..

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும்,

இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 – 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

நாளை முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்” என கூறி உள்ளது Chance of rain in 10 districts.

இதையும் படிங்க : பறவைக் காய்ச்சல் எதிரொலி… தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!


Spread the love
Exit mobile version