Site icon ITamilTv

சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு..!!!

Thiruvannamalai

Thiruvannamalai

Spread the love

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இனி நேரடியாக பயணிக்கும் வசதியினை ( Thiruvannamalai ) தெற்கு ரயில்வே ஏற்படுத்தி கொடுத்துள்ளது .

வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதனை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Also Read : வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ALERT செய்யப்பட்ட சென்னை விமான நிலையம் – மாட்டிய தங்க கட்டிகள்..!!

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது :

சென்னை கடற்கரையில் இருந்து மே 2ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.35 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

திருவண்ணாமலையில் இருந்து மே 3ம் தேதி முதல் அதிகாலை 4 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034)புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.40 மணிக்கு அடையும். ( Thiruvannamalai ) அங்கிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு அடையும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version