Site icon ITamilTv

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!!

Egmore Court

Egmore Court

Spread the love

தெலுங்கு மக்கள் குறித்து தரைகுறைவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் கஸ்தூரியை கைது செய்ய முயன்றபோது வீட்டில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாக இருந்தார் . பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கூறிய கஸ்தூரி முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கஸ்தூரியின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி காட்டமான கருத்துக்களை சொல்லி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Also Read : தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6,000 படுகொலைகள் – அன்புமணி ராமதாஸ் காட்டம்

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு வரும்29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி உத்தரவிட்டிருந்தார் .

இந்நிலையில் மகளை பார்த்துக்கொள்ள தான் மட்டும்தான் இருப்பதாக கூறி நடிகை கஸ்தூரி ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார் . தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் 10 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Spread the love
Exit mobile version