ITamilTv

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு!!

Spread the love

இன்று (20.12.23) மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகாலச் செயல்பாட்டு மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சேத விவரங்களையும் முதல்-அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் வீடியோ கால் மூலமாக முகாம்களில் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, ஆகியோருடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுத் தரைவழியாக அணுகமுடியாமல் உள்ள கிராமங்களிலும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளத் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளர்.


Spread the love
Exit mobile version