நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன் பயிலும் சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர் சின்னத்துரை 12-ம் வகுப்பும், சந்திரா செல்வி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்க முன்பாக சின்னத்துரையும் சந்திரா செல்வியும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர்.
அன்றைய தினம் இரவு 10 மணியளவில் திடீரென அவர்களது வீட்டுக்குள் புகுந்த சக பள்ளி மாணவர்கள் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டி தாக்கியதில், படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதையடுத்து, இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை ஒருவர் என கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், இந்த சம்பவத்தில் இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவனை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.