உத்தரப்பிரதேசத்தில் சாக்லேட் உண்ட 4 வயது சிறுவன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆசை ஆசையாக மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவனின் தொண்டையில் மிட்டாய் சிக்கியுள்ளது.
Also Read : உலகின் மிக வயதான முதலை உயிரிழந்தது..!!
மிட்டாய் சிக்கியதை அறிந்த தாய், அவருக்கு தண்ணீர் கொடுத்தபோது அது கீழே இறங்கி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பல மருத்துவமனைகளுக்கு சிறுவனின் குடும்பத்தினர் அழைத்துச் சென்றபோதும் மருத்துவர்கள் தீபாவளி விடுமுறையில் இருந்ததால் 3 மணி நேரமாக உயிருக்கு போராடி மூச்சுத் திணறி சிறுவனம் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
தீபாவளி விடுமுறையால் மருத்துவர்கள் இல்லாதலால் மகனை காப்பாற்ற முடியாமல் போனதாக சிறுவனின் தாய் கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்துள்ளார்.