Site icon ITamilTv

ஏ.ஆர்.ரகுமான் share செய்த ”The Kerala Story”.. இணையத்தில் வைரல்!!

Spread the love

கேரளாவில் மசூதி ஒன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை ட்விட்டரில் பகிரத்து உள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மனிதன் மீதான அன்பு நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்படுவதாக ‘தி கேரளா ஸ்டோரி’தொடர்பான காட்சிகள் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளன.

மேலும் படத்தின் ட்ரைலர் பிரிவினை வாதத்தைத் தூண்டு வகையில் இருப்பதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ள உள்ள நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி கேரளா ஸ்டோரி பற்றி பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ள கேரளா ஸ்டோரி வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த அஞ்சு மற்றும் சரத் ஜோடி திருமணத்திற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் செருவல்லியில் உள்ள மசூதி நிர்வாகிகளை அணுகியுள்ளார்.

அப்போது அந்த ஜோடிக்கு 10 சவரன் நகை போட்டது மட்டுமின்றி ரூ.20 லட்சம் பணத்தையும் பரிசாக வழங்கி உள்ளனர். இதனையடுத்து அந்த ஜோடியின் திருமணத்தை தங்களது மசூதியிலேயே நடத்திக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் அஞ்சு – சரத் ஜோடியின் திருமணம் செருவல்லியில் உள்ள மசூதியில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க இந்து முறைப்படி நடந்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் மசூதி ஒன்று இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை ட்விட்டரில் பகிரத்து உள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மனிதன் நீ தான் அன்பு நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version