Site icon ITamilTv

CITU Clash-”பேச்சுவார்த்தை முடிந்ததும் அடித்துக்கொண்ட நிர்வாகிகள்..” சென்னையில் பரபரப்பு!!

CITU Clash

CITU Clash

Spread the love

CITU Clash- தேனாம்பேட்டையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்க நிர்வாகிகள் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இன்று இணைஆணையர் ரமேஷ் தலைமையில் போக்குவரத்து தொழில் சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊதிய உயர்வு, நிலுவையில் உள்ள அகவிலைப்படி, உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் சி ஐ டி யு (CITU), அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பேச்சுவார்த்தையில் பங்கேற்க சென்ற ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஐம்பதற்கும் மேற்பட்டவர்களை உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளே செல்ல முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: Defamation Case-”வழக்கை ரத்து செய்யக் கோரிய அண்ணாமலை..”நிராகரித்து நீதிமன்றம் அதிரடி!

இதனால் அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன.

பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் முடிந்து வெளியே வந்த நிர்வாகிகளிடம் பங்கேற்பது அனுமதிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜனை கோயம்புத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் ராகவேந்திரர் என்பவர் கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமான சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுகம் நயனார். ராகவேந்திரரின் சட்டியை இழுத்து பிடித்து தாக்கினார்.

இதனால் அந்த இடம் கலவரமான நிலையில், உடனடியாக காவல்துறையினர் நுழைந்து ராகவேந்திரனை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755556475018354946?s=20

இந்த சம்பவத்தை அறிந்த உடன் வந்த நிர்வாகிகள் ஆக்ரோஷமாக எங்கள் தலைவர் மீது யார் கை வைத்தது என கேட்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசி ராகவேந்திரனை தாக்க உள்ளே செல்ல முயன்றனர்.

மேலும் அங்கிருந்து காவல்துறையினர் நிர்வாகிகளை உள்ளே போக அனுமதிக்காததால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறையினரிடம் தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் காவல்துறையினருக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு (CITU Clash) ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

PUBLISHED BY : S.vidhya


Spread the love
Exit mobile version