ITamilTv

கோவையில் செம்மொழிப் பூங்கா – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

Spread the love

கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு நினைவாக கோவை மத்திய சிறைவளாகத்தில் 165 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது.

இந்த பூங்கா பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் இன்று கோவைக்கு நேரில் வந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலத்தில் சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் பூங்காக்கள், 2 முதல் 3 ஏக்கர் பரப்பளவில் ஒரு மாநாட்டு மையம் மற்றும் திறந்தவெளி பொழுதுபோக்கு அம்சங்கள், பல்லடுக்கு கார் பார்க்கிங் (MLCP), குழந்தைகள் விளையாட்டு பகுதிகள், நடைபாதை பகுதிகள் என பல அம்சங்கள் வரவுள்ளது.

இந்த பணிகள் துவங்கியதில் இருந்து 18 மாதத்தில் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.

இந்தப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தார்.


Spread the love
Exit mobile version